Tuesday, May 25, 2010

முருகனின் ஆறுபடை வீடு




முதற்படை வீடு


திருப்பரங்குன்றம் - ஸ்ரீசுப்ரமணியசுவாமி

சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசுப்ரமணியசுவாமி கல்யாண கோலத்துடன் காட்சி தருகிறார்.

இரண்டாம்படை வீடு

திருச்செந்தூர் - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி

சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில் தூத்துக்குடி அருகில் அமைந்துள்ளாது. கடற்கரை ஓரமாக அமைந்த்துள்ளது. திருச்சிரல்வாய், வீராகுபட்டணம், ஜெயந்திபுரம் போன்ற வேறு சில பெயர்களும் உண்டு. இங்கு வழங்கப்படும் பன்னீஇலை வீபூதி மிகவும் புகழ்பெற்றது.

மூன்றாம்படை வீடு

பழநி - ஸ்ரீபழனி ஆண்டவர்

சென்னையிலிருந்து 445 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவாவினன்குடி, சித்தன்வாழ்வு, போதினி போன்ற பெயர்களும் உண்டு. போதினி என்ற பெயர் மருவி பழநி என்றானது. இங்குள்ள பழநிஆண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது. இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றது.

நான்காம்படை வீடு

சுவாமிமலை - ஸ்ரீசுவாமிநாதசுவாமி

சென்னையிலிருந்து சுமார் 309 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது. திருவேரகம், குருமலை, தாத்ரீகரீ, சுந்தராசலம் போன்ற பெயர்களும் உண்டு.

ஐந்தாம்படை வீடு

திருத்தணி - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி

சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு. 400 அடி உயர மலை 365 படிகள்.

ஆறாவதுபடை வீடு

பழமுதிர்ச்சோலை - சோலைமலை முருகன்

சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது.

No comments: