உலகில் உள்ள பல பொதுநல அமைப்புகள் புவியின் வெப்பமயமாதலை பற்றி பல வகைகளிலும் விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இது சம்பந்தமான பிரச்சாரங்கள் குறைவு தான். ஆனாலும் இது வருங்காலங்களில் இந்தியாவிலுல் அதிகரிக்கும் என நம்பலாம். நாம் அது பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கு தெரிந்து கொள்வோம்.
நமது பூமிப் பந்தானது மிகச்சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளது. பூமிப் பந்தைச் சுற்றிலும் பல வகையான வளி மண்டல அடுக்குகள் உள்ளன. இவை சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும் கவசமாக செயல்படுகின்றன. சூரியனில் இருந்து வரும் அகசிவப்பு, மற்றும் புறஊதாக்கதிர்களை வடிகட்டி அனுப்புகின்றன. இந்த வடிகட்டும் அமைப்பை சில காரணிகள் பாதிக்கும் போது அதிகமான வெப்பக்கதிர்கள் பூமியை வந்தடைந்து பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த நிகழ்வை புவி வெப்பமடைதல் ( Global Warming) என்கின்றனர். இந்த காரணிகள் பல விதமான வாயுக்களால் நிகழ்கின்றன. அவைகளை பசுமை குடில் வாயுக்கள்(Green House Gases) என்கின்றனர். அதிலும் ஸ்ட்ரடோஸ்பியர் (stratosphere) என்ற படலம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவில் இதைப் பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம். இந்த stratosphere வளி மண்டல அடுக்கில் 90 சதவீதம் ஓசோன் படலத்தால் ஆனது. ஓசோனின் வேதிப்பெயர் O3. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. (எ.கா) O - ஆக்ஸிஜன், N - நைட்ரஜன், C - கார்பன், Cl - குளோரின், H - ஹைட்ரஜன். இவற்றின் அளவுகள் கூடும் போதும், குறையும் போதும் அதன் பண்புகள் மாறும். ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் காற்றில் இருப்பவை தான். அதில் ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேரும் போது அது தண்ணீராக மாறி விடுகிறது.
ஓசோன் படலம் சிதைக்கப்படும் போது சூரியக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்குகின்றன.
இதை சிதைப்பதில் பங்கு வகிக்கும் சில வாயுக்கலவைகளில் முக்கியமானவை
1. Co2 - carbon dioxide
2. CH4 - Methane
3. CFC - Chlorofluorocarbons
4. இன்னும் சில வாயுக்கள்
1.Co2 - carbon dioxide (கார்பன்-டை-ஆக்ஸைடு)
நமக்கு நன்கு தெரிந்தது தான். மரங்கள் அழிக்கப் படுவதால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாகி வளி மண்டல அடுக்குகளைப் பாதிக்கிறது. பச்சையக வாயுக்களில்( Green House Gases) 50 சதம் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது.அமேசான் காடுகள் 1987 ல் தீப்பற்றி எரிந்ததால் 500 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றில் பரவியது.
2. CH4 - Methane ( மீத்தேன் ) இயற்கை எரிவாயு
சுரங்க வேலைகளிலும், பச்சை மரங்கள் எரிக்கப்படுவதாலும், நிலத்தில் இருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படும் போதும், ஈரப்ப்பதமான விளை நிலங்களில் இருந்தும், மாடு போன்ற விலங்குகளின் கழிவுகளில் இருந்தும் மீத்தேன் வெளியேறுகிறது.மக்கள் தொகை பெருகுவதால் இதை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்று
3. CFC - Chlorofluorocarbons
நாம் பயன்படுத்தக்கூடிய குளிர் சாதன/பதனப் பெட்டிகளில் பயன்படும் ஒரு விதமான வாயு தான் குளோரோ ப்ளோரோ கார்பனாகும். இது தான் ஓசோன் படலத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுருக்கமாக இதன் வீரியத்தைப் பற்றி சொல்வதானால் Co2 காற்றில் 10 வருடம் வரை அழியாமல் இருக்கும் தன்மையுடையது என்றால் CFC 110 வருடம் வரை தனது அழிவு வேலையை செய்யும் ஆற்றல் பெற்றது.
புவி வெப்பமடைதல் ( Global Warming) - விளைவுகள்
1. புவியின் தட்பவெப்பநிலை மாற்றம்
தொடர்ச்சியான புவி வெப்பமடைதலால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து நீர்நிலைகள் வற்றத் தொடங்கி விடும். அதே வேலையில் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று கொண்டே இருக்கும். கட்டுப்பாடற்ற சீதோசன நிலை நிலவும். வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில் மனிதன் வாழும் சீதோசன நிலையைத் தாண்டி சென்று விடக்கூடும்.
2. கடல் நீர் மட்டம் உயர்தல்
பூமியின் தொடர்ச்சியான வெப்பநிலை அதிகரிப்பால் கடலில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் படிப்படியாக உயரும். இதனால் கடற்கரை ஓரங்கள் அரிக்கப்பட்டு கடல் நீர் ஊருக்குள் வர வாய்ப்பு ஏற்படும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கடலில் இருந்து 100 கி.மீ தொலைவிற்குள் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை நிகழ பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆனாலும் நமது சந்ததிகளுக்கு தூய்மையான உலகைத்தர வேண்டியது நம் கடமை தானே!
No comments:
Post a Comment