Tuesday, May 25, 2010

சித்தர் பாடல்



அகப்பேய்ச் சித்தர் பாடல்


தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!


கருத்து:
தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.


அழுகுணிச் சித்தரின் பாடல்


புல்லர் இடத்திப்போய்ப் பொருள் தனக்குக் கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!


பொருள்:
நல்வழியைக் கைவிட்டுத் தீ நெறியிலே நடப்போர் துறவு வேடம் பூண்டிருந்தாலும் உணவுக்கும் உடைக்கும் திண்டாடுவார்கள். மானந்துறந்து, பொருள் வேண்டி கையேந்தி பல்லைக்காட்டி பரக்கப் பரக்க விழிப்பார்கள். இந்நிலையை அழுகணிச் சித்தர் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். நான் இந்நிலையில் இருக்கின்றேன். என்னுடைய இந்நிலையை போக்க வேண்டும். எனக்கு அருள்வாயாக. பொருளைத் தரவேண்டும் என்று சத்தியை வேண்டுகிறார்.


இடைக்காட்டுச் சித்தர் பாடல்


மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!


பொருள்:
மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்து வெற்றியும் அடையலாம் என்று கூறுகிறார்.

No comments: